என்னவளின் அழகை பார்த்து ,
நிலவு நினைத்து, என்னை விட 
அழகா இருக்கிறாளே, யாரவள்! 
என்னை மெய் சிலிர்க்கவைக்கிறது!
  
நிலவுக்கு என் காதலி மீது ஆசை வந்து 
ரசிக்கும் அழகை பார்த்து 
கோவம் கொண்ட மேகங்கள் 
நிலவை மறைக்க ஓடிவந்தது !
மேகங்கள் நிலவை பாதி மறைத்தது  
ஆனால் நட்சத்திரங்களை மறைக்கவில்லை 
அவை அனைத்தும் என்னவளின் 
மீது விழிவைத்து வியந்து நின்றது!
அதனை பார்த்த கடலுக்கும் ஆசை, 
பொங்கி எழுந்தது பெரிய அலையாய் 
அவளின் பாதம் தொட்டாவது 
பரவசம் அடையலாமென!
கடல் அலையை பார்த்து 
என்னவளுக்கோ பயம் எழுந்தது 
துரத்தில் வெட்கப்பட்டு நின்றவள் 
ஓடிவந்து  என்னை இறுக்கி அணைத்தால்! 
என் மனதுக்குள்ளே இனம்புரியாத 
இன்ப சந்தோசம், என் விழிகளை 
மூடி கொண்டு என் கைகளால், அவளின் 
மெல்லிய இடையை பற்றிக்கொண்டேன்!
எங்கள் மனதை புரிந்துகொண்ட இரவுகள் 
ஆசையை நிறைவு படுத்த, மேகங்கள் 
உதவியுடன் வானை மறைத்து 
எங்கள் கூச்சத்தை போக்கி விலகி நின்றது!
புரிந்தது இருவருக்கும்,ஓருடலாய்
நின்றபின், உண்மைதான் போலும் 
காதல் இரு உடலில் வாழும் 
ஓர் உயிர் என்று!!!