Author Topic: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் ~  (Read 1595 times)

Offline MysteRy

வறுத்த அரிசி சொஜ்ஜி



தேவையானவை:

பச்சைப் பட்டாணி - அரை கப், காய்ந்த மிளகாய் - 5, பச்சரிசி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

வெறும் வாணலியில் அரிசியையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக, இளஞ்சிவப்பாக வறுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, தேவையான நீர் விட்டு... உப்பு பட்டாணி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விடவும். இதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பை போட்டு, தேங்காய்த் துருவலை சேர்க்கவும். நன்றாக கலக்கிவிட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஏதாவது ஒரு சட்னியுடன் பரிமாறவும்.