Author Topic: ~ துளசியின் மருத்துவ குணங்கள்: ~  (Read 352 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226857
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
துளசியின் மருத்துவ குணங்கள்:



இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். துளசி நீரின் மகிமையையும் செய்முறையையும் இங்கே தரப்படுவதால் நோயற்ற வாழ்க்கையின் ரகசியத்தை தெரிந்துகொள்ளலாம்.
துளசி நீர் செய்யப்படும் முறை

1.சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொள்ளவும்.

2.அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விடவும் .

3.ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும் .

4. இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பருகவும்.

5. இவ்வாறு 48 நாட்கள் பருகினால் பல நோய்கள் குணமாகும்.
அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை குணமடையும் இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.
எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.
வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க மட்டுமின்றி உடல் உறுப்புகளையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும்
துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று சாப்பிடலாம் . இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மரு‌ந்து மா‌த்‌திரை மூல‌ம் செ‌ய்ய முடியாததை இ‌ந்த அருமரு‌ந்தான துள‌சி செ‌ய்து‌விடு‌ம்.
« Last Edit: August 15, 2015, 08:48:54 PM by MysteRy »