Author Topic: ~ அரியதரம் ~  (Read 344 times)

Offline MysteRy

~ அரியதரம் ~
« on: August 02, 2015, 04:28:23 PM »
அரியதரம்



தேவையானவை:

•வெள்ளை பச்சரிசி - 4 கப்
•கம்பிக்குருணல் - ஒரு கப்
•சீனி (சர்க்கரை) - 500 கிராம்
•ஏலப்பொடி - 2 தேக்கரண்டி
•தேங்காய் எண்ணெய் - ஒரு போத்தல்

செய்முறை

•பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவிடவும். அதன் பின்பு அரிசியை மாவாக இடிக்கவும். இடித்த மாவை 3 தரம் அரிக்கவும்.

•அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் மாவை போடவும்.

•மாவை அரித்த பின்பு கிடைக்கும் சிறிய குருணலை எடுத்து அதிலுள்ள அழுக்குகளை(நெல்உமி)அகற்றவும்.

•அதன் பின்பு மா போட்ட பாத்திரத்தில் மாவிற்கு மேலே குருணலை போடவும்.

•அப்பாத்திரத்தில் சீனி (சர்க்கரை), ஏலக்காய்த்தூள் இவையிரண்டையும் போடவும்.

•அதன் பின்பு அப்பாத்திரத்தை காற்று உள்ளே போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும்.

•அடுத்த நாள் பாத்திரத்திலுள்ள மாவை நன்றாக கைகளால் குழைக்கவும் (இந்த மாவுடன் வேறு எந்த பொருளும் சேர்க்ககூடாது. அத்துடன் வேறு எந்த ஆயுதமும் பாவிக்ககூடாது).

•குழைத்த மாவை அளவான உருண்டைகளாக்கவும். பின்பு உருண்டைகளை இலேசாக அமர்த்தவும்.

•அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி அதில் எண்ணெயை விட்டு சூடாக்கவும்.

•கொதித்த எண்ணெயில் அமர்த்திய உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறவும்.