" இமைகளே
உன்னில் எனை கவர்ந்ததுன் கண்களே !
உன்னில் உனையே கவர்ந்ததும் அக்கண்களே !
உன் கண்களின் கவின் கவர்ச்சிக்கு
கனக்கச்சிதமான காரணம் யாதென்றேன் ?
கணமும் யோசிக்காமல் கண்ணீர் என்கின்றாய்
எனைகேட்டால்,
உன் விழியரசிக்கு
வெண்சாமரத்தத்தின் இணையாய்
கருஞ்சாமரம் வீசிடும்
துயில்கொள்ளும் தருணத்தினில்
திரைப்போர்வையாய் திறன்படும்
உன் " இமைகளே ".....
மௌனம்
சப்தங்களை மட்டுமே சம்மதித்துவந்த
என் மன சிம்மாசனத்தில்
இன்று சம்மணமிட்டபடி உன்
"மௌனம்"