Author Topic: ~ ரஸப் பொடி ~  (Read 325 times)

Online MysteRy

~ ரஸப் பொடி ~
« on: July 29, 2015, 11:15:24 PM »
ரஸப் பொடி



வேண்டியவைகள்

காய்ந்த மிளகாய் வற்றல் 200 கிராம்
.கொத்தமல்லி விதை 500 கிராம்.
துவரம் பருப்பு 200 கிராம்.
மிளகு 200 கிராம்.
சீரகம் 200 கிராம்.
விரளி மஞ்சள் 100 கிராம்.

செய்முறை

மிளகாயைக் காயவைத்து, காம்பை நீக்கிக கொள்ளவும். மற்ற சாமான்களையும் , வெய்யிலில் நன்றாகக்

காயவைத்து ,ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து மிகவும்

நைஸாக இல்லாமல், சற்று,கரகரப்பான பதத்தில், அறைத்துக்

கொடுக்கச் சொல்லி , பேப்பரில் கொட்டிப் பரவலாக வைத்து

ஆறவைத்து பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.

அவ்வப்போது புதியதாகச் செய்வதானால் சிறிய அளவில்

வருத்துப் பொடி செய்து கொள்ளலாம். மிஷினில் அறைப்பதாநாலும்

லேசாக வறுத்துக் கொடுக்கலாம். வறுத்து அறைத்த பொடி

கெட்டுப் போகாது. நீண்ட நாட்கள் இருக்கும்.