Author Topic: நினைவு துளி  (Read 3409 times)

Offline குழலி

  • Full Member
  • *
  • Posts: 208
  • Total likes: 17
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வாழு வாழ விடு
நினைவு துளி
« on: July 17, 2011, 10:30:56 AM »
கருகிப்போன உயிர்ச் சருகின்
சாம்பலில் பூக்கின்றன
உன் நினைவுத் துளிகள்.

என் அழகான தனிமை
கிழிக்கப்படுகிறது உன்னால்.

மெளனத்தின் வார்த்தைகளெல்லாம்
கேட்கப்படுவதேயில்லை.

அதிகாலைப் பனித்துளிக்காய்
நடு இரவிலேயே
விழித்துக் கொள்கிறது மனசு.

விடிந்தது புரியாமலேயே
இமைகளுக்குள்
சுருண்டு விடுகிறது உறக்கம்.

துடிப்பதை மறந்து போன இதயம்
தற்போதெல்லாம்
ரகசியமாய் விசும்பிக்கொண்டிருக்கிறது.
புதிதாய் வெடித்த
உன் நினைவுகளோடு...




Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நினைவு துளி
« Reply #1 on: July 17, 2011, 02:21:33 PM »

என் அழகான தனிமை
கிழிக்கப்படுகிறது உன்னால்.

super  ;)
                    

Offline Manish

Re: நினைவு துளி
« Reply #2 on: July 24, 2011, 07:51:21 AM »
puthithai veditha unn ninaiuvkalodu