Author Topic: ~ வெயில் காலத்தில் கட்டாயம் தர்பூசனி பழத்தை உண்ணுங்கள் ~  (Read 411 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227486
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெயில் காலத்தில் கட்டாயம் தர்பூசனி பழத்தை உண்ணுங்கள்



தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்ட தர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது இது சிவந்த நிறத்தில் மட்டுமல்லாமல் வெண்மையாகவும் கூட காணப்படும். நிறம் எதுவாயினும் இதை உண்ணலாம். சில இனிப்பாக இருக்கும். சில ருசியே இல்லாமல் சப் பென்றும் இருக்கும்.

உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. பசியை அடக்க வல்லது. இது சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடிய சக்தி இவ் தர்பூசணிக்கு உண்டு . இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறாக எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானமாக இது உள்ளது .