Author Topic: ~ கோழி வறுவலை அதிகம் சாப்பிட்டால் மார்பகம் பெருத்து, புற்றுநோய் ஏற்படலாம்: ~  (Read 409 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கோழி வறுவலை அதிகம் சாப்பிட்டால் மார்பகம் பெருத்து, புற்றுநோய் ஏற்படலாம்: டாக்டர்கள் எச்சரிக்கை



கோழி வறுவலாக தின்றுத்தீர்த்த சீன வாலிபருக்கு உணவுமுறை பழக்கத்தின் விளைவாக மார்பகம் பெருக்க ஆரம்பித்து சிகிச்சைக்காக அவர் டாக்டரை அணுகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

’ஜைனகோமஸ்டியா’ என்றழைக்கப்படும் இந்த பாதிப்பு அவர் மிகவும் விரும்பி, அன்றாட உணவில் ஒரு அயிட்டமாக சாப்பிட்டுவந்த கோழி வருவலால் ஏற்பட்டது என டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

ஆண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்டோஸ்டெரோன் இடையில் ஏற்படும் சமநிலையின்மையால் அவரது மார்பகங்கள் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டே வருவதை அறிந்த டாக்டர்கள், இப்படி ஹார்மோன் வளர்ச்சியை அபரிமிதமாக தூண்டிவிடும் கோழி வறுவலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை அதிகமாக சாப்பிடுமாறும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைப்போன்ற அபரிமிதமான மார்பக வளர்ச்சியால் ஆண்-பெண் இரு பாலினத்தவருக்கும் புற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.