ஊறுகாய் சில பொதுவான குறிப்புகள்
ஊறுகாய் போடுவதற்கு புதிய காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டும். கல் உப்புதான் சேர்க்க வேண்டும். வெல்லம், கடுகு போன்றவை சேர்ப்பதால் ஊறுகாயானது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும். கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அளவுக்கு அதிகமாக உப்பு, எண்ணெய் சேர்க்கக் கூடாது. மரக்கரண்டிகளை உபயோகித்து, ஊறுகாய்களை எடுத்துப் பயன்படுத்தலாம். பெரிய ஜாடிகளில் இருந்து நேரடியாக எடுக்கக் கூடாது. தேவையற்ற மரக்கரண்டிகளை உபயோகித்து சிறிய கிண்ணங்களில் எடுத்துக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் நீண்ட நாட்கள் ஊறுகாய் கெடாது.