Author Topic: ~ சவ்சவ் கட்லெட் ~  (Read 386 times)

Offline MysteRy

~ சவ்சவ் கட்லெட் ~
« on: July 18, 2015, 09:40:34 PM »
சவ்சவ் கட்லெட்



சவ்சவ் - 100 கிராம்,
கேழ்வரகு மாவு - 100 கிராம்,
வெங்காயம் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 2-3,
எண்ணெய் - தேவையான அளவு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
பிரெட் தூள் - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

சவ்சவ்வை தனியாக வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அத்துடன் சவ் சவ், கேழ்வரகு மாவு, சோள மாவு சேர்த்துக் கிளறி கட்லெட் போன்று தட்டி தவாவில் போட்டு பொரித்தெடுக்கவும். தேவைக்கேற்ப வட்டம், சதுர வடிவில் மாவை தயாரித்து பிரெட் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சூடான கட்லெட் தயார்.