Author Topic: ~ சோற்றுக் கற்றாழை அழகு மருத்துவம் ~  (Read 423 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227486
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சோற்றுக் கற்றாழை அழகு மருத்துவம்



குமரி லேகியம்: மாதவிடாய் வலி தொடர்ந்து வராமல் இருக்க

நம்ம புறவாசல் பக்கம் தொட்டியில் வளர்ற சோற்றுக் கற்றாழை மடலுக்குள் இருந்து ஜெல்லை எடுத்து நல்லாப் பிசுபிசுப்பு போகக் கழுவிட்டு, அதில் சீரகம், பூண்டு, பனைவெல்லம் சேர்த்து லேகியமாக் கிளறிக்கணும். இந்த லேகியத்தை தினம் ஒரு ஸ்பூன் ராத்திரி சாப்பிட்டு வந்தா, அடுத்த பீரியட்ஸ் நேரத்துல வலி எடுக்குமோங்கிற பயமே வேண்டாம்.

��
கற்றாழை லோசன்:


வறண்டு போன சருமத்துக்கு, தொடர்ந்து கற்றாழைச் சாறைத் தேய்ச்சிட்டு வந்தா, வறண்ட தோலை வனப்பா மாத்திடும்.


கால் பித்த வெடிப்பில் தொடங்கி, கரப்பான் நோய் வரைக்கும் தோல் கருத்துத் தடிச்சு வறண்டு போயிருந்தாலும், கற்றாழைச் சோற்றை அதன் மேல் தேய்ச்சுட்டு வந்தா, பழைய நிறத்தை மீட்டுக் கொடுக்கும்.

��
கற்றாழை சன்ஸ்கீரீன்

இப்போ பெஸ்ட் சன் ஸ்கிரீனே கற்றாழைதான்னு கண்டு பிடிச்சிருக்காங்க. நிறைய எஸ்.பி.எஃப் (SPF) உள்ள சன் ஸ்கிரீனர் போடக் கூடாதாம். சோற்றுக் கற்றாழை ரொம்ப மென்மையான தீங்கு செய்யாத சன் ஸ்கிரீனாம். எனவே கற்றாழை ஜெல்லியை அரைத்து உபயோகப்படுத்தலாம்