« on: July 13, 2015, 08:05:19 PM »
துவரம் பருப்பு முறுக்கு
குழந்தைகளுக்கு பிடித்த வகையில் கொடுப்பதற்கு இந்த முறுக்கு சரியான தேர்வாக இருக்கும் செய்யவும் மிகவும் எளிதானது. இதில் புதுமைகளை கையாள வேண்டியது உங்களது சாமர்த்தியம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 4 கப்
துவரம் பருப்பு – அரை கப் ( லேசாக வறுத்தது )
பொட்டுக்கடலை – அரை கப்
சிகப்பு மிளகாய் – 25
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை :
அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை, மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியிலோ அல்லது மாவு அரைக்கும் கடையிலோ கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலக் கிண்ணத்தில் மாவை சலித்துக் கொள்ளவும்.
மாவுக்கு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து 1 கரண்டி சூடான எண்ணெய் விடவும். எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெயும் விடலாம். முறுக்கு மிருதுவாக இருக்கும்.
மாவினை தண்ணீர் சேர்த்துப் நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
முறுக்கு நாழியில், ஒரு கண் இருக்கும் தேன் குழல் அச்சைப் போட்டு சூடான எண்ணெயில் பெரிய முறுக்குகளாகப் பிழியவும்.
நன்றாக மொறுமொறுவென்று பொரிந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து வடியவிட்டு ஆறிய பிறகு பறிமாறலாம்.
சுவையான முறுக்கு தயார்.
« Last Edit: July 13, 2015, 08:06:53 PM by MysteRy »

Logged