Author Topic: ~ கும்மாயம் இனிப்பு பலகாரம் ~  (Read 420 times)

Offline MysteRy

கும்மாயம் இனிப்பு பலகாரம்



தேவையான பொருட்கள்

நெய் (1/4 கப்)
சர்க்கரை (பனங்கட்டி சர்க்கரை) – (2 கப்)
நீர் (6 கப்)
செய்முறை

கும்மாயம் பொடி:

பச்சை பயறு (1 கப்), உளுந்து (2 மே.கரண்டி), அரிசி (4 மே.கரண்டி) ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்து மிக்சியில் இட்டு அரைத்து பொடியாக்கி அரித்து வைக்கவும்.

பாத்திரத்தை வாணலியில் வைத்து அரைப்பங்கு நெய்யினை ஊற்றி கும்மாயம் பொடியினை அதனுள் விட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரையும் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி வடித்து வைக்கவும். இந்த சர்க்கரை பாகினை வதங்கும் கும்மாயம் பொடியினுள் விட்டு நன்கு கலக்கவும்.

கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும். மீதி நெய்யினையும் இதனுள் ஊற்றி கிளறவவும். பாத்திரத்தில் நன்கு கும்மாயம் சுண்டும் வரை கிளறி விட்டு எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றி பரவவும். இதனை சூடாகவோ குளிராகவோ பரிமாறலாம். சதுர துண்டுகளாக வெட்டியும் பரிமாறலாம்