Author Topic: ~ செட்டிநாடு தக்காளி குழம்பு ~  (Read 382 times)

Offline MysteRy

செட்டிநாடு தக்காளி குழம்பு



தேவையான பொருட்கள்:

தக்காளி - 3-4 (பெரியது மற்றும் நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

சின்ன வெங்காயம் - 1/2 கப்

தேங்காய் - 3/4 கப்

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2-3 எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலிடிய அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொட்டுக்கடலை, மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் சேர்த்து கிளறி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தக்காளியை சேர்த்து, அதில் உப்பு தூவி, 10 நிமிடம் நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்க வேண்டும். இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறிவிட்டால், சுவையான செட்டிநாடு தக்காளி குழம்பு ரெடி!!!