Author Topic: ~ கறிவேப்பிலை சேவை ~  (Read 337 times)

Offline MysteRy

~ கறிவேப்பிலை சேவை ~
« on: July 04, 2015, 11:10:56 PM »
கறிவேப்பிலை சேவை



எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1/4 கப்,
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
வெந்த சேவை அல்லது இடியாப்பம் - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க:

பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?

முதலில் சேவையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை, நன்கு வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, கடுகு சேர்த்து வெடித்த பின்பு உளுந்து, பச்சை மிளகாய் சேர்க்கவும். நன்கு வறுத்த பிறகு, வெந்த சேவையை சேர்த்து நன்கு கலக்கவும். உப்பு சேர்க்கவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் பொடியை தேவைக்கேற்ப கலந்து வதக்கவும். பின்பு அடுப்பை அணைத்து தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.