Author Topic: ~ செளசெள பொரியல் ~  (Read 417 times)

Offline MysteRy

~ செளசெள பொரியல் ~
« on: July 03, 2015, 07:55:49 PM »
செளசெள பொரியல்



தேவையான பொருட்கள்

செளசெள (பெங்களூர் கத்திரிக்காய்)- 2
தேங்காய் துருவல்- 2 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
உப்பு, மஞ்சள்தூள்- தேவையான அளவு

செய்முறை

• செளசெளவை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைத் போட்டு தாளித்த பின் அதில் செளசெள, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு மூடி வைத்து அவ்வப்போது கிளறவும்.

• காய் வெந்ததும் தேங்காய்த்துருவலைப் போட்டுப் பிரட்டிப் பரிமாறவும்.

• மிளகாய் வற்றலிற்குப் பதில் ப.மிளகாயைப் பயன்படுத்தினாலும் ருசி அதிகம்.

• குளிர்ச்சிக்காய் என்பதால் கோடை காலத்தில் பயன்படுத்த ஏற்றது.