ஃபேன்
ஃபேனில் நன்றாகக் காற்று வர 10 அடி உயரம் கொண்ட அறை என்றால், ஒன்றரை முதல் இரண்டரை அடி அளவுக்கு ராடு கொண்டு ஃபேனைப் பொருத்த வேண்டும். அதுவே 12 முதல் 15 அடி உயரம் என்றால், இரண்டரை முதல் மூன்றரை அடி வரை ராடு கொண்டு பொருத்த வேண்டும். அறைக்கு ஏற்றாற்போல் ஃபேனின் எண்ணிக்கையை நிர்ணயிக்கவேண்டும். 10 -15 அடி அளவு கொண்ட அறைக்கு இரண்டு, 8 - 10 அடி அளவு கொண்ட அறைக்கு ஒன்று என அமைக்கலாம். மூன்று இறகு உள்ள ஃபேன்தான் சிறந்தது. சுத்தம் செய்யும்போது, பிளேடை இழுப்பது, வளைப்பது கூடாது. மிக மெதுவாக ஓடினால் கண்டன்ஸரை மாற்றலாம். முடிந்தவரை ஆறு மாதத்துக்கு ஒருமுறை அதன் கெப்பாசிட்டரை மாற்றுவதும், ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வதும் ஆயுள் நீட்டிக்க உதவும். டேபிள் ஃபேனை அடிக்கடி சுத்தம் செய்யவும்!