Author Topic: ~ பணம் உங்கள் பலம்! ~  (Read 911 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226539
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பணம் உங்கள் பலம்! ~
« on: June 09, 2015, 05:15:00 PM »
பணம் உங்கள் பலம்!

`சிறுதுளி பெருவெள்ளம்' என்பது பழமொழி. இது முதலீட்டுக்கு 100% பொருந்தும். இளம்வயதில் இருந்தே சிறிய தொகையை தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், அது பெரும் பணமாக மாறி இருக்கும். நீங்கள் கோடீஸ்வரியாகி இருப்பீர்கள்!



`இளமையில் கல்' என்பது போல், `இளமையில் முதலீடு' என்பது முக்கிய முதலீட்டு மொழி. வேலைக்குச் சேர்ந்த உடன் முதலீட்டை ஆரம்பிக்கும்போது, முதலீட்டுத் தொகை குறைவாக இருந்தாலும்கூட அதிக லாபம் கிடைக்கும். இதனை ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் புரியும்.

சிறு வயது முதலே அருணா, பிரியங்கா இருவரும் தோழிகள். இருவருக்கும் அவர்களின் 25-வது வயதில் கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கிறது. அருணா வேலை கிடைத்த முதல் மாதத்திலேயே, அவளின் 25-வது வயதிலிருந்தே மாதம் 2,500 ரூபாய் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஆரம்பித்தாள். பிரியங்கா, திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த பிறகு தன் 35-வது வயதில் மாதம் 5,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தாள். தோழிகள் இருவரும் அவர்களின் 65-வது வயது வரையில் இந்த முதலீட்டைத் தொடர்கிறார்கள். பிறகு, ஒரு முக்கியத் தேவைக்காக இந்தப் பணத்தை எடுக்கிறார்கள், அப்போது யார் கணக்கில் அதிக தொகை இருக்கும்?

ஆண்டுக்கு சராசரியாக 8% வருமானம் கிடைத்திருப்பதாக வைத்துக்கொண்டால், மொத்தம் 12 லட்ச ரூபாய் முதலீடு செய்த அருணா கணக்கில் 77.72 லட்ச ரூபாய் இருக்கும். இதுவே 18 லட்ச ரூபாய் முதலீடு செய்த பிரியங்கா கணக்கில் 67.97 லட்ச ரூபாய் இருக்கும். குறைவான தொகையை முதலீடு செய்துவந்தாலும் அருணா கணக்கில் அதிக தொகை சேரக் காரணம், அவள் முதலீட்டை இளம் வயதிலே ஆரம்பித்ததுதான்.



நமது சிறிய முதலீட்டைக்கூட பன் மடங்காகப் பெருக்கக்கூடிய ஆற்றல் கொண்ட முதலீட்டு முறையை, ‘பவர் ஆஃப் காம்பவுண்டிங்' (Power of Compounding) என்பார்கள். இதனை உலகின் எட்டாவது அதிசயம் என்றுகூட சொல்லலாம். இம்முறையில் இளம்வயதில் முதலீடு செய்யும்போது முதலீடு சிறிதாக இருந்தாலும்கூட, அது பல மடங்காகப் பெருகும்.

தோழிகளில் பலருக்கு கோடீஸ்வரி ஆக வேண்டும் என்ற பெரும் கனவு இருக்கும். இதனை நனவாக்குவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. மாதம் நீங்கள் ரூபாய் 2,000 வீதம் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு நல்ல பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து வந்தால், அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால், நீங்கள் கோடீஸ்வரிதான். பல நல்ல மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு 20%-க்கு மேல் வருமானத்தைத் தந்திருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் ரூபாய் 1,000 வீதம் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு நல்ல பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து வந்தால், அதற்கு ஆண்டுக்கு 18% வருமானம் கிடைத்தால், நீங்கள் கோடீஸ்வரிதான்.

18% வருமானம் கிடைக்க கொஞ்சம் அதிகம் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதிக ரிஸ்க் இல்லாமல் 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்ட் மியூச்சுவல் ஃபண்டில் மாதம் 2,000 ரூபாய் வீதம் 33 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், நீங்கள் நிச்சயம் கோடீஸ்வரிதான். இதே 2,000 ரூபாயை கொஞ்சம் கூடுதலாக ரிஸ்க் எடுத்து ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் போட்டால், அது 15% வருமானம் கொடுக்கும்பட்சத்தில் 28 ஆண்டுகளில் கோடீஸ்வரியாகிவிட முடியும்!
கிளம்பிவிட்டீர்களா... முதலீட்டை ஆரம்பிக்க?!