Author Topic: ~ சன்னா ~  (Read 438 times)

Online MysteRy

~ சன்னா ~
« on: May 25, 2015, 07:10:26 PM »
சன்னா



என்னென்ன தேவை?

காபூலி சன்னா அல்லது வெள்ளைக் கொண்டைக்கடலை - 1/2 கிலோ,
தக்காளி - 1/2 கிலோ,
வெங்காயம் - 1/2 கிலோ,
ஏலக்காய், பட்டை, கிராம்பு - சிறிது (வறுத்துப் பொடிக்கவும்),
உப்பு - தேவையான அளவு,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
சன்னா மசாலா - 2 டீஸ்பூன்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 6 பல்,
பச்சை மிளகாய் - 4,
சீரகம் - 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 2,
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் காய வைத்து, சீரகம், பிரிஞ்சி இலை போட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்றாக பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும். தூள்களைப் போட்டு புரட்டி தக்காளி போட்டு, உப்பையும் போட்டு கொதிக்க வைக்கவும்.சன்னாவை சில மணி நேரம் ஊறவைத்து குக்கரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைக்கவும். வேக வைத்த சன்னாவை தக்காளி விழுது, வெங்காயக் கலவையில் கொட்டி, நன்றாகக் கொதி வரும் வரை வைக்கவும். சன்னா வேக வைத்த தண்ணீரையும் கீழே கொட்டாமல் கொதிக்கும் சன்னாவில் சேர்க்கவும். வறுத்துப் பொடித்த ஏலக்காய், பட்டை, கிராம்பு மேலே தூவவும்...