Author Topic: ~ கோடைக்கு ஏற்ற ப்ரைம்ஸ்டோன் ஜுஸ்! ~  (Read 402 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

தில்ஷாத் பேகம்
டயட்டீஷியன்



தேவையானவை:
மாம்பழம் - 1, தோல், விதை நீக்கிய ஆரஞ்சு, சாத்துக்குடி - தலா அரை பழம், சர்க்கரை, ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.



செய்முறை:
ஆரஞ்சு, சாத்துக்குடி சுளைகளை மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். இதனுடன், மாம்பழத்தைத் தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்ட வேண்டும். மாம்பழத்துடன் சிட்ரஸ் அமிலம் நிறைந்த, பழங்கள் சேர்ந்த ஜூஸ் தயார்.

பலன்கள்:
வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்ற ஜூஸ் இது. வைட்டமின்-ஏ, சி மற்றும், நார்ச்சத்து, பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட தாது உப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. வைட்டமின் - ஏ மற்றும் ஃபிளவனாய்டு இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து இதயம் சீராகச் செயல்பட உதவும். இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். செரிமானப் பிரச்னை இருப்பவர்களும் இந்த ஜூஸ் அருந்தலாம். மூட்டுவலி, இதய நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் இந்த ஜூஸை அடிக்கடி பருகலாம். தோல் மினுமினுப்பாகும். தலைமுடி நன்றாக வளரவும், புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் இந்த ஜூஸ் உதவும். எந்த வேளையிலும் பருக ஏற்ற ஜூஸ் இது.