என் பிரிய தோழி....!
இலட்சிய தூறலில்
என்னை நனைக்கிறாய்
நான் நனைந்த பின்பு
என் தாயாய்
ரசிக்கிறாய் - விரும்புகிறாய்
நீ என் அன்புதோழி....!
இரு அறை இதயம்
அதில் முழுமையாய்
நிறைகிறாய்...
எனக்கென துடித்த
என் இதயத்தை
நீயே துடிக்க வைக்கிறாய்
நாளை நீயே நிருத்தி வைப்பாய்
ஒரு வேளை
பிரிவை தந்தால்...!
பைபிளும் குர்நானும்
கீதையையும்
வழிகாட்டி வாழ்க்கைக்கு என்று
பள்ளி சொல்லி தந்தது
மூன்றுமே
ஒன்றாய் வந்தது
எனக்கு அது நீயாய்
தெரிந்தது நியமாய்!
தூர நீ இருந்தாலும்
துயரமில்லை
நினைவினில் நீ வாழ்வதால்
என்றும் உன் பிரியம்
எனக்கு வேண்டும்
இன்று போல்
நானும் வாழ்வேன்
உன்னால் உலகில்
சந்தோசமாய்
என் அழகிய
தோழியே...