Author Topic: ~ தேவையான பொருட்கள்: ~  (Read 501 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227452
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ தேவையான பொருட்கள்: ~
« on: April 08, 2015, 07:32:54 PM »
தேவையான பொருட்கள்:



தேங்காய் - 1

உருளைக்கிழங்கு - 4 (நறுக்கியது)

கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)

முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)

எலுமிச்சை - 1/2

பூண்டு - 1

மிளகாய் - 4

மல்லி - 2 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

பட்டை - 1 கிராம்பு - 2

ஏலக்காய் - 2 கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் மிக்ஸியில் மிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டாவது பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த இரண்டாவது பாலில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் காய்கறிகளை சேர்த்து, உப்பு சிறிது தூவி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது வெந்ததும், அதில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் குழம்பில் கொட்ட வேண்டும். இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து இறக்கினால், தேங்காய் பால் குழம்பு ரெடி!!!