Author Topic: ~ வேப்பம்பூ மசாலா தோசை ~  (Read 392 times)

Online MysteRy

~ வேப்பம்பூ மசாலா தோசை ~
« on: March 29, 2015, 09:27:22 PM »
வேப்பம்பூ மசாலா தோசை



தோசை மாவு - 100 முதல் 125 மி.லி.,
நல்லெண்ணெய் (தோசைக்கு) - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த வேப்பம்பூ - 5 கிராம்,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 20 கிராம்,
நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்,
நறுக்கிய தக்காளி - 25 கிராம்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 2 கிராம்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
கடலைப் பருப்பு - 2 கிராம்,
கொத்தமல்லி - சிறிதளவு,
நெய் - 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
இந்தியன் கிரேவி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

காய வைத்த வேப்பம்பூவை சுத்தப்படுத்தி, அதை நெய்யில் வதக்கி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம், கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அத்துடன் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்ததும், அத்துடன் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

தக்காளியின் பச்சை வாசனை போனவுடன் மசித்த உருளைக்கிழங்கு, இந்தியன் கிரேவியை சேர்த்து வதக்கவும். பிறகு நெய்யில் வறுத்த வேப்பம்பூவை போட்டு நன்கு கலக்கவும். இதன் மேல் கொத்தமல்லி இலைகளைத் தூவவும். தோசை வார்த்து அதில் வேப்பம்பூ மசாலாவை வைத்து சூடாகப் பரிமாறவும். நெய்யில் வதக்கும் முன்பு வேப்பம்பூவை குப்பை இல்லாமல் எடுத்துக் கொள்ளவும்.