Author Topic: ~ பைனாப்பிள் ஜூஸ் ~  (Read 562 times)

Online MysteRy

~ பைனாப்பிள் ஜூஸ் ~
« on: March 18, 2015, 02:13:13 PM »
பைனாப்பிள் ஜூஸ்



தேவையானவை: 
பைனாப்பிள் - 300 கிராம், தண்ணீர் - 150 மி.லி, ஐஸ் கட்டி, சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை:
பைனாப்பிளில் இருக்கும் முட்களை சுத்தமாக நீக்கிவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதில் ஐஸ் கட்டி, தண்ணீர் கலந்து, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் குடிக்கலாம்.

பலன்கள்:
வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். சிறிதளவு வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும். சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படாது. உடலில் நச்சுக்களை வெளியேற்றும். சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.