Author Topic: ~ 30 வகை லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி! ~  (Read 3353 times)

Offline MysteRy

கேரட் தோசை



தேவையானவை:

இட்லி அரிசி -  200 கிராம், உளுத்தம்பருப்பு -  50 கிராம், கேரட்  - 2, எண்ணெய் - 100 மில்லி, உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

 அரிசி, உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். கேரட்டை மிக்ஸியில் அரைத்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

குறிப்பு:

சட்னி, சாம்பார் இதற்கு சிறந்த காம்பினேஷன்.