Author Topic: ~ பரங்கிக்காய் கறி ~  (Read 384 times)

Offline MysteRy

~ பரங்கிக்காய் கறி ~
« on: January 31, 2015, 10:11:55 PM »
பரங்கிக்காய் கறி



தேவையானவை:

பரங்கிக்காய்  பெரிய துண்டு 1, தேங்காய்த்துருவல்  சிறிதளவு, கடுகு  அரை டீஸ்பூன், சீரகம்  கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, எண்ணெய்  3 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.

செய்முறை:

பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் சேர்த்துத் தாளித்து, வேகவைத்த பரங்கிகாயைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பலன்கள்:

பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பரங்கிக்காயில் அதிகம் இருப்பதால், சரும நோய்களுக்கு நல்லது. உடல் சூட்டைத் தணித்து, பித்தத்தைப் போக்கி, பசியைத் தூண்டிவிடும். நார்சத்து அதிகமிருப்பதால் உணவு செரிமாணத்தையும் எளிதாக்கும்.