Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நாட்டு மருந்து கடை!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ நாட்டு மருந்து கடை! (Read 413 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226862
Total likes: 29028
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ நாட்டு மருந்து கடை!
«
on:
January 29, 2015, 09:06:06 PM »
அஞ்சறைப் பெட்டியில் சுக்குக்கு அடுத்த இடம் மிளகுக்கு. “1600-களில் அரபு வணிகர்கள் மிளகின் விலையை இரண்டு டாலருக்கு ஏற்றாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு 400 ஆண்டு கால அடிமை வாழ்வு இருந்திருக்காது’’ என வரலாற்று பேராசிரியர்கள் குறிப்பிடுவார்கள். அந்த அள
வுக்கு மிளகு கோலோச்சிய காலம் உண்டு. 16-ம் நூற்றாண்டு வரை, காரமான எந்த உணவுக்கும் மிளகுதான் தீர்வு.
அயல்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு மிளகாய் அறிமுகப்படுத்தப்படும் வரை, மிளகைத்தான் பயன்படுத்திவந்தோம். மிளகாய் என்ற சொல்லுக்கு மிளகு + ஆய் என்று அர்த்தம். அதாவது மிளகைப் போன்றது என்று அர்த்தம். இன்று சமைக்கும் மிளகில் இருக்கும் பைப்பரின், பைப்பரிடின் (Piperine, Piperidine) என்கிற இரண்டு மருத்துவப் பொருட்கள், பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். இயல்பாக, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருள், மிளகு.
அலர்ஜி போக்கும் மிளகு
அலர்ஜியால் வரும் மூக்கடைப்பு, தும்மல், நீரேற்றம், சில நேரங்களில் ஏற்படும் தோல் அரிப்பு, திடீர் தோல் படைகள், கண் எரிச்சல், மூக்கு நுனியில் ஏற்படும் அரிப்பு, மூச்சிரைப்பு போன்ற அலர்ஜி நோய்களை விரட்டும் இயல்பு, மிளகுக்கு உண்டு.‘பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’ என்று ஒரு சொலவடை உண்டு. நாம் அறியாமல், நம் உடலில் நச்சு செலுத்தப்பட்டால் கூட, அதை முறியடிக்கும் சக்தி, மிளகுக்கு உண்டு. நச்சுப்பொருளை அறியாமல் தீண்டினாலோ, முகர்ந்தாலோ ஏற்படும் பல்வேறு உடனடி அலர்ஜி தொந்தரவுகளை, மிளகு உடனடியாக முறியடிக்க உதவும்.
சளித்தொல்லைக்கு
பனிக்காலங்களில் சிறு குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி ஏற்பட்டால், அதை வெளியேற்ற இருமல் வரும். இதற்கு மிளகுதான் கைகண்ட மருந்து. குழந்தை இரவில் திடீரென எழுந்து, தொடர்ச்சியாக இருமலில் அவதியுறும்போது, நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை, இருமலால் வெளியேற்ற முடியாமல் திணறும். உடனே, தடாலடியாக கடையில் இருமல் மருந்தை வாங்கிக்கொடுப்பது தவறு. பெரும்பாலான இருமல் மருந்துகள், இருமலை உடனடியாக நிறுத்தி, சளியை உள்ளுக்குள் உறைய வைத்து, நோயைக் குணப்படுத்தாமல் விட்டுவிடும்.
மிளகு, சளியை இளக்கி வெளியேற்றி இருமலைக் குறைக்க உதவும். நான்கு மிளகைப் பொடித்து , ஒரு ஸ்பூன் தேனில் குழைத்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து இரவில் கொடுக்க, சளி வெளியேறி இருமலை நிறுத்தும். சில நேரங்களில் வாந்தியில்கூட சளி வெளியேறும். அதைப்பார்த்து பயப்பட வேண்டாம். ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம்் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்க வேண்டாம்.
தோல் நோய்க்கு மிளகு
தோலில் ஏற்படும் திடீர் தடிப்புக்கு, மிளகுக் கஷாயம் நல்ல மருந்து. தலையில் வரும் புழுவெட்டுக்குச் சின்ன வெங்காயம், மிளகு இரண்டையும் அரைத்து, வெளிப்பூச்சாகப் பூச பிரச்னை சரியாகும். பனிக்காலங்களில் நெஞ்சுச் சளி கட்டாமல் இருக்க, எல்லா வயதினரும் தினமும், உணவில் மிளகைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள், மிளகைத் தினமும் ஏதாவது ஒரு விதத்தில், உணவில் சேர்த்துவர, இளைப்பின் தீவிரம் குறையும்.
மிளகுக் கஷாயம் எப்படிச் செய்வது?
அருகம்புல் - கைப்பிடி, மிளகு - 6, வெற்றிலை - 2 பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, மூன்றையும் போட்டுக் கொதிக்கவைத்து, அரை டம்ளராக வற்றவைத்து எடுக்கவும். இதைக் கொடுக்க, தோல் அரிப்பு படிப்படியாகக் குறையும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ நாட்டு மருந்து கடை!