Author Topic: ~ எலுமிச்சை ஊறுகாய் ~  (Read 389 times)

Offline MysteRy

~ எலுமிச்சை ஊறுகாய் ~
« on: January 20, 2015, 08:14:17 PM »
எலுமிச்சை ஊறுகாய்



தேவையான பொருள்கள்:

எலுமிச்சை - 10
இஞ்சி துண்டுகள் சிறிதளவு
பச்சை மிளகாய் -3
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் பொடித்தது - 1டீஸ்பூன்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி -1 டீஸ்பூன்
தேவையான உப்பு
மிளகாய்ப் பொடி - 5 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

பழங்களைச் சிறு துண்டங்களாக நறுக்கி உப்பு

சேர்த்து விதைகளை நீக்கிவிட்டு ஒரு பாட்டிலில் போடட்டு 2 நாட்கள் ஊற வைக்கவும்.

இஞ்சி, பச்சைமிளகாயை சிறிது எண்ணெயில் வதக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு இறக்கி, மஞ்சள், பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.

எண்ணெய் ஆறியவுடன் மிளகாய்ப் பொடியையும் சேர்த்து எலுமிச்சைக் கலவையில் கொட்டிக் கலக்கவும். அடிக்கடி கிளறிவிட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்து ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.