இறைவனிடம் எதை எதையோ
கேட்க நினைத்தவனுக்கு
அர்ச்சகரின் அர்த்தம் தெரியாத
மந்திரத்தைக் கேட்டவுடன்
கேட்கவந்த அத்தனையும்
மறந்து போனதுபோல
கர்ப்பக்கிரகத்து சிலைகளை
கண்களால் நகலெடுத்து
மனதுக்கு இடமாற்றம் செய்யும்
பக்தனைப் போல
நானும் உன்னிடம்
ஏதேதோ பேசவந்து
உனைப் பார்த்த மாத்திரத்தில்
அத்தனையும் மறந்து போய்
கண்களால் உனை நகலெடுத்து
இதயத்துக்கு இடமாற்றம் செய்யும்
பக்தனானேன் நான்