காதல் வேண்டாம்
என்றே வாழ்ந்தவன் நான்
காதலை அழகாய்
காட்டியவள் நீ..!!
விழிகள் தவிக்கிறது
உன்னை காண
நடக்குமா நடக்காத என்ற
எண்ணத்தோடு.....
இதயம் ஏங்குகின்றது
உன்னுடன் வாழ...!!
நீ என்னுள் நான் உன்னுள்
வாழ வேண்டும்..!!
என்னோடு நீ இரு
அது போதும் எனக்கு..!!
என் வாழ் நாள்
ஒரு நாள் என்றாலும்
அது உன்னோடு மட்டும்
இருக்கட்டும்...........
உன்னையே
நினைத்து கொண்டிருக்கும்
ஒரு உயிர்....!!!!