Author Topic: ~ புகைத்தல் அளவை கண்காணிக்க உதவும் சாதனம் அறிமுகம் ~  (Read 690 times)

Offline MysteRy

புகைத்தல் அளவை கண்காணிக்க உதவும் சாதனம் அறிமுகம்

புகைத்தல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று எவ்வளவு தான் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும், புகைத்தலுக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இவ்வாறானவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், புகைத்தலின் அளவை கட்டுப்படுத்தும் பொருட்டும் தற்போது Quitbit எனும் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் லைட்டர் என்று அழைக்கப்படும் இச்சாதனம் ஒருவருடைய புகைத்தல் தொடர்பான முழுமையான தகவல்களையும் தரக்கூடிய விசேட அப்பிளிக்கேஷனைக் கொண்டுள்ளது.