Author Topic: இதுதான் காதல் என்பதா......???  (Read 5593 times)

Offline Global Angel

இதுதான் காதல் என்பதா......???


ஒரு பிஸியான காலை நேரத்தில் 8 மணியளவில் 80 வயதான ஒரு பெரியவர் மருத்துவமனைக்கு வந்தார். கையில் உள்ள கட்டுகளை அவிழ்த்து தையலை பிரிப்பதற்காக வந்த அவர் 9 மணியளவில் இன்னொரு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகவும் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார்.டாக்டருக்கு பார்க்க வேண்டிய பேஷண்ட்கள் அதிகம் இருந்தாலும் பெரியவர் மேல் இரக்கம் கொண்டு அவர் காயங்களை பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை செய்துகொண்டவாறே அவரிடம் பேச்சு கொடுத்தார்.


கடிகாரத்தை மாறி மாறி பார்த்து கொண்டிருந்த பெரியவரை பார்த்து டாக்டர் கேட்டார் பெரியவரே உங்களுக்கு வேறு ஏதும் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட இருக்கிறதா என்று . அதற்கு அந்த பெரியவர் இல்லை டாக்டர் ஆனால் நான் நர்ஸிங் ஹோமுக்கு போயி என் மனைவி கூட ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வேண்டும் என்றார்.


டாக்டர் அவர் மனைவிக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார் அந்த பெரியவர் சொன்னார் என் மனைவிக்கு ( Alzheimer’s disease) ஞாபக மறதி வியாதிக்கு அந்த நர்ஸிங் ஹோமிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றார். உடனே டாக்டர் கேட்டார் நீங்கள் கரெக்ட் டைமுக்கு போகவில்லை என்றால் உங்கள் மனைவி அப்செட் ஆகிவிடுவாரா என்று?

பெரியவர் சொன்னார் இல்லை டாக்டர் என் மனைவிக்கு நான் யாரு என்று கூட கடந்த ஐந்தாண்டுகளாக தெரியாது. அந்த அளவிற்கு ஞாபக மறதி என்றார்.

டாக்டருக்கு ரொம்ப ஆச்சிரியம் கலந்த வியப்புடன் அவரை பார்த்து உங்கள் மனைவிக்கோ நீங்கள் யாரு என்று தெரியாத போதும் தினசரி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட விரும்புகிறீரகளா என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் சிரித்தவாறே டாக்டரை தட்டிக் கொடுத்து கொண்டே சொன்னார். டாக்டர் அவளுக்கு வேண்டுமென்றால் நான் யாரு என்று தெரியாது ஆனால் எனக்கு அவள் யாரு என்று தெரியுமே...அவள்தான் என் காதல் மனைவி என்று.