Author Topic: ஸ்டெர்லைட் ஆலையும்! தமிழர்களின் கோழைத்தனமும்!  (Read 1137 times)

Offline Yousuf

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள், கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் நிர்வாகம் அப்பீல் செய்தது.  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியம் இல்லை. என்று டெல்லி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

சிந்திக்கவும்: ’’மராட்டிய மாநிலத்தில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை இளிச்சவாயர்கள் ( தமிழர்கள்) வாழும் தமிழகத்துக்கு எப்படி வந்தது என்பதை பார்ப்போம். தங்கள் வாழ்விடத்தை, ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கை உணர்வுடன் போராடும் மக்களே ஒரு நாட்டின் உண்மையான குடிமைக்கள் என்று சொல்லலாம். இயற்க்கைக்கு எதிரான இதுபோன்ற பயங்கரமான நாசங்களை உண்டாக்கும், சுற்றுப்புற சூழ்நிலைகளை கெடுக்கும் நாசகார நிறுவனங்களுக்கு எதிராக தமிழக மக்களின் போராட்டம் மராட்டிய மக்களோடு ஒப்பிடும்போது வீரியம் அற்றதாகவே தோன்றுகிறது.

1990-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்டது ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை. .மராட்டிய மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற் சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். அதே மராட்டிய மக்கள், மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு மராட்டிய மாநில அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்து இருந்த உரிமத்தை ரத்து செய்தது. மேலும் குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல் போனது. இந்தியாவில் எங்கும் கால் பதிக்க முடியாத அவர்களுக்கு இளிச்சவாயர்கள் வாழும் மாநிலமான தமிழகத்தில் இலகுவாக கால்பதிக்க முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவான தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அதிகம் வாழும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட உயர் நீதிமன்றம் கொடுத்த தடையை மறுத்து இந்திய உச்ச நீதிமன்ற களவாணிகள் அனுமதி கொடுத்திருப்பது நீதித்துறை ஆளும்வர்க்கங்களின் கைகளில் என்பது மீண்டும் தெளிவாக நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்ச நீதிமன்றமே இப்படி என்றால் மக்கள் யாரிடம் முறையிடுவார்கள். இதை தமிழக மக்களின் கையாலாகாத கோழைத்தனம் என்றே சொல்லலாம். காடுகள் அதிகம் உள்ள ஒரிசா மாநிலத்தில் கூட இந்த ஆலைக்கு அனுமதி கிடைக்க வில்லை. மக்கள் நெருக்கமாக வாழும் தூத்துக்குடி நகரத்தில் இதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களின் கையாலாகாத தனத்தை நிருபிக்கும் மற்றொரு சான்று.

ஈழத்திலே தன் ரத்த பந்தங்கள் கொல்லப்படும்போது இப்படித்தான் உணர்வில்லா பிண்டங்களாக வேடிக்கை பார்த்தார்கள். அதை பக்கத்து நாட்டு பிரச்சனை என்று சொல்லி தேசபக்தி முகமூடி அணிந்து பதுங்கி கொண்டார்கள். குறைந்த பட்சம் தமிழக மீனவர்களை சிங்கள தீவிரவாத ராணுவத்தினர் சுட்டு கொள்ளும் போதாவது கிளர்ந்தெழுவார்கள் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இப்போது ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம் என்று கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தியோடு வாழ்கிறார்கள். மராட்டிய மாநிலத்து கிராமத்து மக்களும், விவசாயிகளும் இதுபோன்ற தீய சக்திகளுக்கு எதிராக போராடி வெற்றி கொள்ள முடிந்திருகிறது. ஆனால் படித்தவர்கள் அதிகம் வாழும் தமிழர்களால் இதை சாதிக்க முடியவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்திலே காட்டு வேட்டை என்ற பெயரிலே பழங்குடி மக்களை கொன்று குவிக்கும் இந்திய பயங்கரவாத ராணுவத்தை எதிர்த்து அந்த பழங்குடி மக்கள் ஆயுதம் தாங்கி போராடுகிறார்கள். அவர்கள் இயற்கையான தங்கள் வாழ்விடங்களை பாதுகாக்க போராடும் இந்திய நாட்டின் சிறந்த குடிமக்கள். நாமோ கோழைகள், பூனையைகூட ஒரு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தினால் ஒருகட்டத்தில் புலியை போல சீறிப்பாயும் தமிழர்களோ தங்களின் வரலாற்றை மறந்து கோழைகளாக சினிமாகாரர்களின் வழித்தடங்களை பின்பற்றி சுகபோக வாழ்க்கை வாழ ஆசைபடுகிறார்கள். தமிழா நீ என்ன கோழையா! பதில் சொல்! என்று தொடங்கும் தீமைகளுக்கேதிரான உன்போராட்டம்.

Offline RemO

Sinthika vendiya visayam usf
vivasaayikal sernthu amerika raanuvathaiye viratiya varalaru undu anal ingu namaal makkalukkum sutrusulalukkum kedu vilaivikkum oru thozhirsaalaiyai kuda mooda mudiyavillai

Offline Yousuf

இதற்க்கு காரணம் மனிதர்களிடம் வேருன்றி  இருக்கும் சுயநலம் மற்றும்  சிந்தனை அற்ற தன்மை தான் ரெமோ!