Author Topic: ~ உலகின் மிகப்பெரிய உள்ளரங்க வாகன விளையாட்டு பூங்கா ~  (Read 1158 times)

Online MysteRy

அபுதாபி யாஸ் தீவு பகுதியில் 2010-ல் திறக்கப்பட்ட‌ ஃபெராரி வேர்ல்டு என்றழைக்கப்படும் வாகன‌ விளையாட்டு கேளிக்கை பூங்கா அமைந்துள்ளது.

உலகின் அதிவேகமான‌ ரோலர் கோஸ்டர் உள்ளிட்ட பல்வேறு வாகன‌ விளையாட்டு சாதனங்களை உள்ளடக்கி, 86,000 சதுர மீட்டரில் உலகின் மிகப் பெரிய உள்ளரங்க பூங்காக்களில் ஒன்றாக திகழ்கிறது.

உலகம் முழுவதுமிருந்து இங்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களும், மிக சிறந்த இத்தாலியன் உணவகங்கள் விற்பனை பேரங்காடிகள், 20-க்கும் மேற்பட்ட வித்தியாசமான ரோலர் கோஸ்டர் சவாரிகளும் இந்த உள்ளரங்கத்தில் உள்ளன.



.