Author Topic: ~ கொழுப்பு உடலில் செய்யும் மாற்றங்கள் – எல்லாரும் தெரிந்திருக்க வேண்டியவை ~  (Read 352 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226880
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொழுப்பு உடலில் செய்யும் மாற்றங்கள் – எல்லாரும் தெரிந்திருக்க வேண்டியவை

வெண்ணெய் அல்லது எதாவது கொழுப்பை எடுத்து காற்றுபடும்படி வெளியே வையுங்கள். விரைவில் கருப்பு நிறம் படிய துவங்கும். அதன்பின் கொழுப்பு கெட்டுபோய்விடும். இதன் பெயர் ஆக்சிடைசேஷன். காற்றில் உள்ள ஆக்ஸிஜன் கொழுப்புக்கு எதிரி. விரைவில் கொழுப்பை கெட்டு போக வைத்துவிடும்.
இதை நினைவில் கொள்ளவும். அடுத்து நம் லிவருக்கு செல்வோம்.
உணவில் உள்ள சர்க்கரை இங்கேதான் ட்ரைகிளிசரடு கொழுப்பாக மாற்றபடும். அதை ரதத்த்தில் சுமந்து செல்ல வி.எல்.டி.எல் எனும் வாகனம் தயார் ஆகும். ஏராளமா சர்க்கரை உணவில் இருந்தால் ஏராளமா ட்ரைகிளிசரைடு இருக்கும். அந்த சூழலில் நிறைய சின்ன, சின்ன வி.எல்.டி.எல்லை லிவர் உற்பத்தி செய்யும். எவ்ளோ சீக்கிரம் ட்ரைகிளிசரைடை லிவரில் இருந்து அனுப்பறமோ, அவ்ளோ சீக்கிரம் லிவருக்கு நல்லது. காரணம் அத்தனை சர்க்கரையை அது புராசஸ் செய்யணும்.
இப்ப சின்ன சைஸ் வி.எல்.டி.எல்லில் ஏறி ஜம் என ட்ரைகிளிசரடு நம் ரத்தகுழாய் வழியா தொப்பைக்கு செல்லும். அங்கே நம் தொப்பை சைஸை இன்னும் ஓரிரு இஞ்சு பெரிதாக்கும்
ட்ரைகிள்சர்டை சுமந்து செல்லும் பணியை செய்து முடித்த வி.எல்.டி.எல் இப்ப எல்.டி.எல் என அழைக்கபடும். எல்.டி.எல்லுக்கு அடுத்த பணி ஒன்று உண்டு. குப்பை உணவை உண்டதால் இதயகுழாயின் இன்ஃப்ளமேஷன் எனும் புண் உருவாகி இருக்கும். அதை குணப்படுத்த எல்.டி.எல் மேலே பூசப்படும்.
மீதம் இருக்கும் எல்.டி.எல் என்ன ஆகும்? இது சின்ன சைஸ் எல்.டி.எல் என்பதால் நம் ரத்தகுழாயில் உள்ள ஓட்டைகளில் உள்லே நுழைந்து மாட்டிகொள்ளும்.
இப்ப முன்பு சொன்ன ஆக்ஸிடைஸேஷன் (கொழுப்பு/ஆக்ஸிஜன்) நினைவுக்கு வருதா?
குட்….நம் ரத்தத்தில் இருக்கும் ஏராளமான ஆக்ஸிஜன் ரத்தகுழாயில் இருக்கும் சின்ன சைஸ் எல்.டி.எல்லை தாக்கும். ஆக்ஸிடைசேஷன் நிகழும். கொழுப்பு கெட்டு புண் உண்டாகி மாரடைப்பு நிகழும். இதை தடுக்கும் சக்திவாய்ந்த மினரல்களை ஆண்டிஆக்சிடண்டுகள் என்கிறோம். ஆனால் அவையும் ஒரு எல்லை வரை தான் நம்மை காப்பாற்றும்.
இப்ப கொழுப்பு உணவு நம்மை எப்படி காப்பாற்றும் என்பதை பார்ப்போம்.
வெண்ணெய்/முட்டை போன்றவை நம் லிவருக்கு பெரிய சைஸ் எல்.டி.எல்லை உற்பத்தி செய்ய உதவும். கொழுப்பு உணவில் ட்ரைகிளிசரைடு எண்ணிக்கையும் குறையும். ஆக லிவர் பெரிய சைஸ் டைப் ஏ எல்.டி.எல் உருவாக்கும்.
இந்த பெரிய சைஸ் எல்.டி.எல் நம் ரத்தகுழாயில் உள்ல ஓட்டைகளை விட அளவில் பெரியவை என்பதால் அவை நம் ரத்தகுழாயில் ஒட்டாது. ஆக்சிடைசேஷன் நிகழாது.
ஆனால் பெரிய சைஸ் எல்.டி.எல் எடை அதிகம். நார்மல் கொலஸ்டிரால் டெஸ்டால் நம் உடலில் உள்ள எல்.டி.எல் என்ன வகை என்பதை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை. எடை அதிகம் உள்ள பெரிய சைஸ் எல்.டி.எல் நம் எல்.டி.எல் கணக்கை அதிகம் காட்டும். உடனே “எல்டிஎல் அதிகம் ஆயிடுச்சு, பட்டரை குறை, முட்டையை நிறுத்து என சொல்லி” அரிசியை விழுங்க வைத்து சின்ன சைஸ் எல்.டி.எல்லை உருவாக்கி நம் எல்.டி.எல் அளவை குறைந்து நம் உயிருக்கு உலைவைத்துவிடுவார்கள் மருத்துவர்கள்.