Author Topic: ~ எந்த உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? ~  (Read 389 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226895
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எந்த உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த உணவு களைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்டசிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன்.

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுக ளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்? பதில் சொல்கிறார் டய ட்டீஷியன் புவனேஸ்வரி

இந்த உணவுகளைச் சாப்பிட்டதா ல்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்க லாம்.

இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன் றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிற து.

புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகும் தன்மை கொண்டவை. வேர்க் கடலை, பால், அசைவஉணவு வகைகள், எண்ணெய் எல்லா ம் சீக்கிரமே கெட்டுப்போகும்.எண்ணெயில்பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்துவரும்.

மழை, பனி க் காலத்தில் உணவுகள் கெட்டுப்போகக் காரணமா க இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்ச னுக்குள் இருக்கும் பொருட் களுக்குள்வந்து உட்கார்ந்துகொள்ளும் இப்பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்து விட்டுப்போகும்.

மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல் லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என் கிற நினைப்பு வேண்டாம். ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற் ற உணவுப் பொருட்களுக்கும் பரவி விடும்.

கிச்சன்பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள்இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன் படுத்து வார்கள். வெயிலில் காயவைப்பதால் பூஞ்சை கள் மறைந்து விடாது.

அவற்றை உடனடியாக கொட்டி விடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினா லும் ஃபுட் பாய்சன் ஏற்படும். சிப்ஸ் வகைகளை வாங்கும் போது கவன மாக இருங்கள்.

எண்ணெயில் இரு ந்து கெட்டுப்போன வாசனை வந் தால் அதைச்சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங் களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாகவாங்கி பயன்படுத்த வேண் டும்.

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக் காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிட ப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள் ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீ ங்களே தயாரித்தனுப்புங்கள்.

கடையில் வாங்கிச் சாப் பிடுவதற்கு முன் பல முறை யோசியுங்கள். மீன் சாப்பிட்ட பிறகு த யிர் சாப்பிடக் கூடா து, சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதை களைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்.