Author Topic: மனிதன் இளைப்பாறும் இடம்  (Read 500 times)

Offline thamilan

ஓடி ஓடி ஓடியே
ஓடிக் கலைப்பதே
ஓடையின் லட்சியம்
ஓடும் ஓடைக்குக் கூட
ஓய்வெடுக்க ஓரிடம் உண்டு
அது கடலுடன் கலப்பது

மானிடா நீயும்
ஓடி ஓடி ஓடியே
ஓடிக் களைகிறாய்
பருவம் வந்தது முதல்
முதிர்ந்து உதிரும் வரை
உனக்கும் இளைப்பாற ஓரிடம் உண்டு
அது கல்லறையே