Author Topic: ~ இரைப்பை குடல் அழற்சிக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்! ~  (Read 367 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227481
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இரைப்பை குடல் அழற்சிக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

உப்பு உப்பில் சோடியம் உள்ளது. இது உடலில் நீர்வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் உப்பு கிருமிகளை எதிர்த்துப் போராடுவதோடு, செரிமான பாதையில் pH அளவையும் சீராக பராமரிக்கும்.

ஆகவே ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை 1 லிட்டர் நீரில் கலந்து, அதனை நாள் முழுவதும் சீரான இடைவெளியில் குடிக்க வேண்டும்.

இஞ்சி இரைப்பை குடல் அழற்சியை சரிசெய்வதில், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளைக் கொண்ட இஞ்சியும் ஒன்று. இது வயிற்றில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றையும் குறைக்கும்.

எனவே அதற்கு 1 கப் நீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் 1 டீஸ்பூன் இஞ்சியை போட்டு 10-15 நிமிடம் மூடி வைத்து, பின் அதனை வடிகட்டி, அதில் தேன் சேர்த்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால், சற்று விரைவில் குணமாவதைக் உணரலாம். குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இஞ்சி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பெருங்காயத் தூள் பெருங்காயத்திலும் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் தன்மை இருப்பதால், இது இரைப்பை குடல் அழற்சியை உண்டாக்கிய கிருமிகளை அழித்து, விரைவில் நிவாரணம் தரும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, செரிமான பாதையையும் வலுவாக்கும்.

அதற்கு 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். மேலும் சமைக்கும் போது உணவில் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரும் மிகவும் சிறப்பான ஒரு நிவாரணப் பொருள். அதற்கு 1 டீஸ்பூன் வடிகட்டாத ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். இல்லாவிட்டால், தினமும் இரண்டு முறை திராட்சை ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்தும் குடிக்கலாம்.

புதினா புதினாவில் ஆன்டி-மைக்ரோபியல் அதிகம் இருப்பதால், இவை வாய்வு தொல்லை, உப்புசம், குமட்டல், வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் தரும்.

அதற்கு 1 கப் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த புதினாவை சேர்த்து, 10 நிமிடம் மூடி வைத்து, பின் அதனை வடிகட்டி, தேன் சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இதனால் வயிறு குளிர்ச்சி அடையும்.

வாழைப்பழம் வாழைப்பழத்தில் உள்ள அமைலேஸ் என்னும் ஸ்டார்ச் இரைப்பை குடல் அழற்சியை சரிசெய்யும். அதிலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் இருப்பதால், இவை செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவும். அதிலும் வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்து தினமும் 2-3 முறை உட்கொள்வது நல்லது.

தயிர் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், வயிற்றில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுகள் அழிந்து, வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும்.

மேற்கூறியவைகளை தொடர்ந்து ஒரு வாரம் பின்பற்றியும் எந்த ஒரு மாற்றமும் தெரியாவிட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற தொடர்பில் இருங்கள்…