Author Topic: ~ யூரிக் ஆசிட்டை கரைக்கும் வெள்ளரி ஜூஸ் ~  (Read 378 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227480
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
யூரிக் ஆசிட்டை கரைக்கும் வெள்ளரி ஜூஸ்

சமீபத்திய ஆராய்ச்சிகளில் புற்று நோய்க்கு மருந்து வெள்ளரியில் உள்ளது என கண்டுபிடித்துள்ளனர். வெள்ளரி உடலை குளிர்ச்சி ஆக்கும் தன்மையும், மிகுந்த ஆல்கலைஸிங் குணம் கொண்டது என எல்லாருக்கும் தெரியும். இதே வெள்ளரி மூட்டுகளிலுள்ள யூரிக் ஆசிட் படிகங்களை நீக்கி கவுட் எனும் கீல்வாதத்தை குணமாக்குகின்றது. இந்த ஜூஸை குடிக்கும்போது வலி அதிகமாகும். இதுவே குணமாவதின் அறிகுறி. உடலில் படிந்துள்ள பழைய நச்சுகளை கிளறி வெளியேற்றுகின்றது. இஞ்சியும், செலரியும் வீக்கத்தை குறைத்து உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றது.

தேவை:

1 நடுத்தரமான அளவுள்ள வெள்ளரி
2 செலரி கிளைகள்
1 துண்டு எலுமிச்சைப்பழம்
1 இஞ்ச் இளம் இஞ்சி

செய்முறை:

மேலே சொன்ன எல்லாவற்றையும் நன்றாக கழுவி சுத்தம் பண்ணிக் கொள்ளவும். வெள்ளரியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அதே முறையில் செலரியையும் துண்டுகளாக்கி கொள்ளவும். எலுமிச்சை பழத்தின் பாதியை எடுத்துக்கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் பண்ணிக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் அடித்து அல்லது ஜூஸரில் பிழிந்து குடிக்கவும்.

எவ்வளவு நாட்கள் குடிக்க வேண்டும் ?

உங்களுக்கு முழுமையான குணம் தெரியும் வரை தினமும் ஒருமுறை அல்லது விரைவாக குணம் தெரிய வேண்டுமென்றால் இருமுறை எடுத்துக்கொள்ளலாம்.