Author Topic: ~ அம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் ஹெர்பல் காபி ~  (Read 529 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227450
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் ஹெர்பல் காபி



'எனக்கு அடிக்கடி தலைவலி வரும். அப்போது தலைசுற்றலும், வாந்தியும் இருக்கும். நாள் முழுவதும் நான் படும் கஷ்டத்தைப் பார்த்து, என் மாமியார் இந்தக் கஷாயக் காபியை ஒருநாள் போட்டுத் தந்தார். காபி குடித்துவிட்டுத் தூங்கி எழுந்தால், தலைவலி, தலைசுற்றல் போயிருந்தது. அன்றிலிருந்து வீட்டில் யாருக்குத் தலைவலி வந்தாலும் இந்த காபிதான்' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த கமலா.

தேவையானவை:அதிமதுரம்  5 கிராம், அமுக்காரா கிழங்கு  10 கிராம்,  தனியா, சீரகம், சோம்பு  தலா 10 கிராம், சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம்  தலா 2 கிராம், கிராம்பு, ஏலக்காய்  தலா 4. எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்திப் பொடிக்கவும்.

செய்முறை: இந்தப் பொடியை கடாயில் போட்டு, பொன் நிறமாக வறுக்கவும். இந்தப் பொடியை காபி ஃபில்டரில் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி இறக்கவும். இதில் பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கவும். அல்லது டம்ளரில் பொடியைப் போட்டு கொதிக்கும் நீரைவிட்டு சற்று நேரம் கழித்து டீ வடிகட்டியில் வடித்தும் சாப்பிடலாம்.

டாக்டர் பத்மபிரியா, சித்த மருத்துவர்: இந்த ஹெர்பல் காபி, கபத்தைப் போக்கும். உடலுக்கு நல்ல எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். வயிறு உப்புசம் இருந்தாலும், சட்டென சரியாகும்.  நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.  நரம்புக்குப் புத்துணர்ச்சி தரும்.  உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.