Author Topic: பூமியைப் பற்றி நமக்குத் தெரியாத சில அரிய விஷயங்கள்  (Read 623 times)

Offline Little Heart

நாம் வாழும் நாடு, மாநிலம் மற்றும் வேறு சில இடங்களைப் பற்றி நாம் பேசும்போது உள்ள அறிவை விட, நமது பூமியைப் பற்றி நாம் குறைவாகவே தெரிந்துள்ளோம் என்பதில் சந்தேகமே இல்லை நண்பர்களே. இந்த அறிவு டோஸில் நமது பூமி பற்றிய சில ஆச்சரியங்களை அறியத் தருகிறேன்.

புவியின் மேற்பரப்பில் 70% தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, நமது புவி ஒரு நீலக் கோள் போலத் தெரியும். பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் அல்ல, சரியாகச் சொன்னால் 23 மணி, 56 நிமிடங்கள் 4 நொடிகள் ஆகும். இதனால் தான் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை 366 நாட்கள் கொண்ட லீப் ஆண்டினைக் கொண்டுள்ளோம்.

பூமி காந்த சக்தியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புவியின் காந்தசக்தி பூமிக்கு வெளியிலும் பல கிலோமீட்டர்கள் வரை பரவியுள்ளது. இதனால் தான் சூரியனின் துகள்கள், கதிர்வீச்சு மற்றும் பல விண்வெளிப் பொருட்களில் இருந்து நாம் தப்பித்துக்கொண்டு இருக்கிறோம்.

பூமியின் 10% மேற்பரப்பு பனிக்கட்டியால் ஆனது. இதற்குக் காரணம் ஆர்க்டிக் பகுதி தான். இது மட்டும் ஆண்டிற்கு 10,000 முதல் 50,000 பனிக்கட்டிகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு பனிப்பாறையும் சுமார் நான்கு ஆண்டுகள் வரை இருக்கும்.

இவ்வாறு நமது பூமி பற்றி இன்னும் பல ஆச்சரியமான விடயங்கள் உள்ளன. நண்பர்களே, நமது பூமி பற்றி உங்களுக்குத் தெரிந்த சில தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.