Author Topic: ~ ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி :- ~  (Read 439 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி :-




இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.. தொண்டைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகும்.பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்பட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுவதுண்டு. எனவே, சுக்குத்துளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். மருத்துவகுணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல் போன்றவைகளில் சேர்த்து சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் குணமாகிவிடும்.