ஆர்க்டிக் ஓநாய் பற்றிய தகவல்கள்:-

ஆர்க்டிக் ஓநாய் (Arctic wolf, Canis lupus arctos) பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் விலங்கினம் ஆகும். இவை துருவ ஓநாய்கள் (Polar Wolf), அல்லது வெள்ளை ஓநாய்கள் (White Wolf) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இவை -112 டிகிரி வரை கடுங்குளிரைத் தாங்கும் சக்தி வாய்ந்தவை. இவை ஐந்து மாதங்கள் வரை தொடர்ந்து இருளில் வாழும். ஆர்க்டிக் ஓநாய்கள் மட்டுமே 11 ஆண்டுகள் வரை சராசரியாக வாழும்.
ஆர்க்டிக் ஓநாய்கள் குடும்பமாக வாழும் இயல்பு உடையவை. தாய் ஓநாய்கள் ஒரு தடவைக்கு ஆறு அல்லது ஏழு குட்டிகள் வரை ஈனும். தந்தை ஓநாய் தாய் மற்றும் குட்டிகளுக்கு இரை தேடிக் கொண்டு வந்து தரும். குளிர் அதிகமான காலங்களில் பனியில் வளை தோண்டி அதில் படுத்து உறங்கும். பிற இன ஓநாய்களும் கரடிகளும் இவற்றின் எதிரிகள் ஆகும். ஆர்டிக் ஓநாய்கள் உணவின்றி பல வாரங்கள் வரை வாழும்.
ஆர்க்டிக்ஓநாய்கள் அழகான சிறியமுகமும் அடர்த்தியான வாலும் கொண்டவை. அவைகளின் தலை மற்றும் உடல் 1 ½, அல்லது 2 ½ அடியாக இருக்கும் மற்றும் அவைகளின் வால் பொதுவாக 10-16 அங்குல இருக்கும். அவைகளின் எடை சராசரி 5-13 பவுண்டுகளாக இருக்கும். ஆர்க்டிக் ஓநாய்கள் சில நேரங்களில் சாம்பல், நீலம், அழகான வெள்ளை நிறங்களில் கணப்படும். கோடை நெருங்கி வரும் நிலையில், ஆர்க்டிக் ஓநாய்களின் வெள்ளை முடிகள் உதிரத்தொடங்கி பழுப்பு நிறமாக மாறத் தொடங்குகிறது. பிறகு அதே செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பழுப்பு தோலாகவும், நவம்பர் மாதம் தோலானது முழுமையாக வெள்ளையாகவும் மாறும். அப்போது உடல் வெண்மையாகவும் வால் மட்டும் பழுப்பாகவும் இருக்கும் இச்சமயங்களில் தனது வாலைத் தூக்கிபிடித்தபடி இவை அலையும். பனியில் சறுக்காமல் நடக்க ஏதுவாக இவற்றின் பாதங்களில் மயிர் உண்டு.
ஆர்க்டிக் ஓநாய்கள் மீன், பறவை, பூச்சிகள், ஆர்டிக் முயல் மற்றும் பிற பாலூட்டிகளை உண்ணும். அவைகள் உணவுக்காக காத்திருக்கும் போது இறந்த திமிங்கிலம் போன்ற விலங்குகளின் உடல்கள் கிடந்தால் அவற்றையும் உண்ணும். பல மைல் தூரத்திலிருந்தும் கூட நூற்றுக்க்கணக்கான ஓநாய்கள் கூடிவிடும். அவசியம் ஏற்பட்டால் ஒழிய இவை நீந்துவதில்லை. நகரும் பனிக்கட்டிகள் மீதேறி கடலில் இவை பயணம் செய்யும்.துருவக் கரடிகளின் பின்னால் சென்று, அவை தின்ற மிச்சத்தை சில ஓநாய்கள் உண்டு உயிர் வாழும். வேறு உணவு கிடைக்காத போது இவை ஒன்றையொன்று தின்பதும் உண்டு. இந்த ஓநாய்கள் விலங்குகளை வேட்டையாட தங்களது பற்களைப் பயன்படுத்தும். அவை தங்கள் இரையைத் துண்டிப்பதற்கு தங்களது இரண்டு அங்குல நீளமான நகங்களைப் பயன்படுத்தும்.