Author Topic: ~ பீட்ரூட் அல்வா:- ~  (Read 411 times)

Offline MysteRy

~ பீட்ரூட் அல்வா:- ~
« on: October 29, 2014, 08:16:46 PM »
பீட்ரூட் அல்வா:-



தேவையான பொருட்கள்:-

துருவிய பீட்ரூட் - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 4 ஸ்பூன்
முந்திரி - 8
ஏலக்காய் - 2

செய்முறை:-

1) ஒரு பாத்திரத்தில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடவும்.

2) பீட்ரூட் வெந்ததும் பால் வற்றும் வரை கிளறவும்.

3) பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

4) அல்வா பதம் வர ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

5) பின் முந்தரி பருப்பு வறுத்து அதனுடன் சேர்க்கவும்.

6) ஏலக்காய் பொடி செய்து சேர்த்து கிளறி பரிமாறவும்..