காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள் :-

* இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் கடவுளின் திருவடியை மறப்பது கூடாது.
* கோபத்தால் பிறருக்கு ஏற்படுவதை விட நமக்கே அதிக தீமை உண்டாகிறது.
* போட்டி பொறாமை இருக்கும் உள்ளத்தில் மனநிறைவு இல்லாமல் போய் விடும்.
* மனம் எதில் தீவிரமாக ஈடுபடுகிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே செல்லக் கூடாது. இருப்பதில் திருப்தி கொள்வதே சிறந்தது.
* நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம்.