Author Topic: ~ ஒரு கப் சூப்! சிம்பிள் & ஹெல்த்தி, 15 வகைகள் ~  (Read 1185 times)

Offline MysteRy

  கார்ன் சூப்



தேவையானவை:
வேகவைத்து மசித்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள், வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துக்கள்  தலா கால் கப், தக்காளி  1, இஞ்சித் துருவல், மிளகுத்தூள்  தலா ஒரு டீஸ்பூன், வெண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பால்  அரை கப், கொத்தமல்லித்தழை, புதினா  சிறிதளவு.

செய்முறை:
பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த கார்ன் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். மசித்த ஸ்வீட் கார்ன் முத்துக்களை ஒரு டம்ளர் நீரில் கலக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பால் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். (குறிப்பு: இந்த சூப்பில், புரோகோலி துண்டுகளைச் சேர்த்து வேகவிட்டும் செய்யலாம்).

பலன்கள்:
கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.  மார்பகம், தொண்டை, குடல் புற்றுநோய்களுக்கு எதிராகச் செயல்படும். மேலும், சோளம் சேர்ப்பதால், செரிமானக் குறைபாடு நீங்கும். ரத்தசோகை மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.  சிறுநீரைப் பெருக்கும்.  மூல நோயாளிகள், சோளத்தை மட்டுமே பயன்படுத்தி, சூப் செய்து சாப்பிடலாம்.