Author Topic: ~ ஆளி விதை சட்னி! ~  (Read 385 times)

Offline MysteRy

~ ஆளி விதை சட்னி! ~
« on: October 16, 2014, 08:52:53 PM »
ஆளி விதை சட்னி!

flax seed என்றால் ஆளி விரை அல்லது ஆளி விதை அல்லது சணல்விதையென்று சொல்லலாம்.
ஆளி விரையில் அடங்கியுள்ள சத்துக்கள் புரதம், கால்சியம், இரும்பு , நார்ச்சத்து.
Omega-3 எனப்படும் fatty acid மீன்களில் கிடைக்கும்.
மீன்கள் சாப்பிடாதவர்கள் flax seed உண்ணலாம்.
omega3- HDL கொலஸ்ட்ராலை அதிகமாக்கி LDL கொலஸ்ட்ராலை குறைக்கும்.
Raw flax seed-ல் cyanate எனப்படும் substance இருகிறது அது உடம்புக்கு நல்லது கிடையாது எனவெ வறுத்து சாப்பிடுவதுதான் உகந்தது.நாள் ஒன்றுக்கு 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.

flax seed meal என்று கடையில் கிடைக்கும் அல்லது வறுத்து பொடியாக அரைத்து கொள்ளலாம். நாம் காலையில் உண்ணும் பால் அல்லது cereals-சில் சேர்த்து சாப்பிடலாம்.தோசை, இட்லி, சாப்பாத்தி மாவில் கலந்து சமைக்கலாம்(60 gram அரிசி அல்லது கோதுமைக்கு 15 gram flax seed powder சேர்க்கவும்)

சட்னி:-
ஆளி விதை - 30 gms
கறிவேப்பிலை- 10 gms
உளுத்தம் பருப்பு- 15gms
துவரம் பருப்பு - 15gms
காய்ந்த மிளகாய் - 3 அல்லது தேவைக்கேற்றவாறு
உப்பு தேவைக்கேற்றவாறு
பெருங்காயம் சிறிது

தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:
1.வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம் ,கறிவேப்பிலை,ஆளி விதை, உளுத்தம் பருப்பு, மிளகாய், துவரம் பருப்பு, ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
2.ஆறியபின் உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
3.கடுகு,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.