Author Topic: ~ நவதானிய அப்பம் ~  (Read 558 times)

Offline MysteRy

~ நவதானிய அப்பம் ~
« on: October 14, 2014, 02:13:55 PM »
நவதானிய அப்பம்



தேவையானவை:
நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப்,
பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் -  ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.

செய்முறை:
நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன்  பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை  தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.