Author Topic: நமது சூரியன் எதிர் காலத்தில் அழிந்துவிடும்  (Read 765 times)

Offline Little Heart

நமது பூமியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றால், அதற்கு நமது சூரியன் தான் காரணம்! சூரியன் இல்லாவிட்டால், புவியில் உயிர் தோன்றியே இருக்காது. ஆனால், இதில் கவலைக்கிடமான விடயம் என்ன தெரியுமா? நமது சூரியன் எதிர் காலத்தில் அழிந்துவிடும் என்பது தான்!

தற்போது நமது சூரியன் இருப்பதால் புவியில் ஒரு இன்பமான, உயிர் வாழக்கூடிய வெப்ப நிலை இருக்கிறது. ஆனால், போகப் போக சூரியனில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விடும். அந்த மாற்றங்களுள் நமது சூரியனின் அளவு அதிகரிப்பதும் ஒன்றாகும். இவ்வாறு ஒரு நட்சத்திரம் பெரிதாகியதும் அதை சிவப்பு அரக்கன் (red giant) என்று அழைப்பார்கள். நமது சூரியன் ஓர் சிவப்பு அரக்கன் ஆனதால் ஏற்படும் விளைவாக புவியில் உள்ள வெப்ப நிலை அதிகரித்துவிடும்.

சரி, இவ்வாறு புவியில் வெப்ப நிலை அதிகரித்துப் போகும் பொது, முதலாவதாக அனைத்துத் தாவரங்களும் அழிந்து போய்விடும். தாவரங்கள் அழிந்தால் புவியில் ஆக்சிசன் உற்பத்தி நின்றுபோய்விடும். மேலும் தாவரங்களை உண்ணும் விலங்குகளுக்கு உணவு இல்லாமல், அந்த விலங்குகளும் கூட அழிந்து விடும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும்.

புவியில் வாழும் மனிதர்கள் ஆகிய நமக்கு அழிவு நிச்சயம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நமது புவியை விட்டு வேறு ஒரு உலகத்திற்குச் சென்றால் நமது மனித இனம் உயிர் வாழமுடியும். கேட்கவே பயங்கரமாக இல்லையா…?

அட அட, முக்கியமான ஒரு விடயத்தைச் சொல்ல மறந்து விட்டேனே. மன்னிக்கவும் நண்பர்களே :-P! நமது சூரியன் எப்போ அந்த சிவப்பு அரக்கன் நிலையை அடைந்துவிடும் என்பதை நான் இன்னும் கூறவில்லை. அது ஒன்றும் இல்லை… அதற்கு இன்னும் 5,000,000,000 வருடங்கள் இருக்கிறது.

சபா… என்ன பெருமூச்சு விடுகின்றீர்களா…?